சகல பிரச்சனைகளுக்கும் மந்திர பிரயோகம் :2

குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட 
குடிப்பழக்கத்தில் இருந்து கணவனை திருத்த விரும்பும் பெண்கள் புவனேஸ்வரி படம் வாங்கி அதில் பாஸ்போர்ட் சைஸ் அளவில் கணவன் படத்தினை உள்ளே வைத்து பிரேம் செய்து அந்த படத்தினை கன்னி மூலையில் வைத்து மல்லிகைப்பூ கொண்டு ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்”; என்று 1008 உரு வீதம் 90 நாட்கள் ஜெபித்து பின்பு தினசரி 300 உரு ஜெபிக்க கட்டாயம் குடிப்பழக்கத்திலிருந்து விடுபடுவார்கள்                                                                         

கணவன், மனைவி ஒற்றுமை ஏற்பட:
ராகவேந்திரர் படத்திற்கு மல்லிகைப்பூ மாலை போட்டு அவரை குருவாக ஏற்று வணங்கி பின்பு அந்த படத்திற்கு முன்பு பட்டுத் துணியில் அமர்ந்து ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்”; என்று தினசரி 300 உரு ஜெபிக்க கணவன், மனைவி ஒற்றுமை ஏற்படும்.                                             ---

வியாபார முடக்கத்தில் இருந்து விடுபட:
(ஸ்தம்பனம் உடைய) வியாபார ஸ்தலங்களிலோ மற்றும் வீட்டில் எந்த காரியமும் நடைபெறாமல் தடைபட்டு ஸ்தம்பித்து நின்று விட்டால் அந்த இடத்தில் ஈசானியத்தில் தேங்காய் எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றி வெள்ளெருக்கு விநாயகருக்கு அருகம்புல் கொண்டு ஓம் அரி ஒம்”; என்று தினசரி 1008 உரு 48 நாட்கள் ஜெபிக்க முடக்கம் உடையும். 48 நாட்கள் சைவ உணவு மட்டுமே சாப்பிட வேண்டும்.      

பாவகர்மாக்களில் இருந்து விடுபட:

இளநீரில் உள்ள தண்ணீரில் கல்கண்டு சேர்த்து அதில் 1008முறை ஓம் சிவசிவ ஓம்என்று தர்ப்பைப்புல் கொண்டு ஜெபித்து தினசரி சூரிய உதயத்திற்கு பதினைந்து நிமிடத்திற்கு முன்பு இளநீரை குடிக்க வேண்டும். பின்பு, சிவபுராணம் படிக்க வேண்டும். இதனால் முன்ஜென்ம பாவ கர்மாக்கள் படிப்படியாக குறையும்.   

Comments