அஞ்சன மை தயாரித்தல் மற்றும் அதன் பயன்கள்


அஞ்சன மை இடுவது அதிகமாக  பெண்கள் மட்டுமே கண்ணில் மையிடுவார்கள் என்பது தவறு. பெண்களும், ஆண்களும் கண்ணுக்கு தவறாமல் மையிட்டு வரலாம். அதன் மூலம் பலநோய்கள் நம் உடலை அணுகா வண்ணம் காத்துக் கொள்ளவேண்டும்.

அஞ்சன மை  தயாரிக்கும் முறை

வெள்ளைக் கரிசலாங்கண்ணியின் இலைகளைத் தண்ணீர் சேர்க்காமல் இடித்துச்சாறு எடுக்கவும்.25 செமீ நீள அகலமுள்ள வெள்ளைத் துணியை எடுத்து அந்தச்சாற்றில் ஓரிரு முறைகள் சாறு காலியாகும் வரை உலர்த்தி, மீண்டும் தோய்த்துமீண்டும் உலர்த்தி, பின் அந்தத் துணியை உருட்டி திரியாகச் செய்து கொள்ளவேண்டும்.பின் விளக்கெண்ணெயை ஊற்றிய விளக்கில், மேற்படி கரிசலாங்கண்ணிச்சாறு ஊட்டிய திரியைப் போட்டு வைத்துக் கொள்ளவேண்டும். ஒரு புது மண் சட்டியில் தோல் நீக்கிய சோற்றுக் கற்றாழைச் சாற்றை ஐந்து தடவை,தடவி காயவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அந்தச் சட்டியை அந்தவிளக்கின்மீது காற்று உள்ளே புகுந்து விளக்கு எரியுமாறு கவிழ்த்து வைத்துவிடவும்.அந்த விளக்கு தொடர்ந்து எரியுமாறுபார்த்துக் கொள்வதுஅவசியம்.மறுநாள் அந்த கற்றாழை தடவிய புதுச் சட்டியில் படிந்திருக்கும் கரியைவழித்தெடுத்து போதுமான அளவு சிற்றாமணக்கெண்ணெய் விட்டுக் குழைத்துவெள்ளிச் சிமிழில் பத்திரப்படுத்தி கண்ணுக்கு தீட்டி வர கண் ரோகங்கள்அனைத்தும் குணமாகும்.கண்ணொளி ஒருகாதந்தூரம் காணும்.அதாவது ஒரு காத தூரம்இருக்கும் பொருள்களும் கண்ணுக்குத் தெரியும்.

வீட்டில் உள்ள பேரில் பாதிப் பேராவது கண்ணாடி போடாமல்இருப்பதில்லை.காரணம் இது போன்ற மிக நல்ல வழக்கங்கள் இல்லை.கண்ணில் போடும் கலிக்க மருந்துகளால், உடலில் உள்ள ராஜ கருவிகளான ஈரல்,மண்ணீரல், சிறு நீரகம் ஆகியவற்றில் உள்ள குறைபாடுகளும், குற்றங்களும்,நஞ்சுகளும் நீங்கி உடல் நோயினின்றும் நீங்கி புத்துணர்வு பெறும்.

  • வசிய அஞ்சனம் மை - இதனை திலகமிட யாரும் வசியமாவார்கள்.
  • குங்குமப்பூ அஞ்சனம் மை - பெண் தேவதைகள், சக்திகள் வசியமாவார்கள்
  • சத்ரு சம்ஹார அஞ்சனம் மை - எதிரிகள் வசியமாவார்கள், நோய் வராது 
  • பிற மத அஞ்சனம் மை - எந்த பிரார்த்தனையும் கைகூடும் 
  • யாக அஞ்சனம் மை - ஞானம், யோகம் நிலை கிடைக்கும் 
  • சர்வததோஷ அஞ்சனம் மை - சர்வ தோஷங்களும் நீங்கும்.
  • அஞ்சன மை அரைக்கும் போது மந்திரம் ஜெபித்துக்கொண்டே அரைககவேண்டும். ஓரை பார்த்து அரைக்க வேண்டும். அரைப்பவர் மூச்சு சூரிய மூச்சாக இருக்கவேண்டும். அப்போதுதான் மை சக்தி பெறும்.


Comments