வசிய வித்தை மர்மங்கள் 1


வசியம் என்றாலே அது ஒரு மாயக்கலை என்கிறார் போல ஒரு எண்ணம்தான் எல்லோரிடமும் இன்று உள்ளது. உண்மையில் வசியம்என்பது மனித சக்திக்கு உட்பட்ட ஒரு ஆற்றல்.

வாழ்க்கையில் வெற்றி பெற்ற ஒவ்வொரிடமும் அவர்களது வெற்றிக்கு பின்னால் ஒரு சக்தியாக இருந்திருப்பது வசியமாகத்தான் இருக்க முடியும்.

அரசியல் வாதிகள் தங்கள் பேச்சின் வசீகரத்தால் தான் வெற்றி பெற முடியும். நடிகர்கள் தங்கள் நடிப்பின் வசீகரத்தால் தான் புகழ் பெற முடியும்.

தெருவில் குச்சி மிட்டாய் விற்பவர்கள் கூட வசீகரித்தால் தான் விற்பனை செய்கின்றனர்.

அஷ்டமா சித்துக்களில் ஆறாவதாக விளங்கும் சித்து வசித்வம்என்னும் வசிய சக்தியாகும். வசிய சக்தி இரண்டு விதமானது. சில மூலிகைப் பொருட்களால் மந்திர தந்திரமாக செய்யப்படுவது ஒரு வகை சக்தி.

மனதை ஒருமுகப்படுத்தி எண்ணங்களைக் கொண்டு இந்த உலகத்தவரை வசப்படுத்துவது இன்னொரு வகை சக்தியாகும்.

முதல் வகையான மந்திர தந்திரமான சக்தியைப் பெற, அதர்வண வேதம் சில வழிமுறைகளைக் காட்டுகிறது. பீதாம்பர ஜாலம், மற்றும் மகேந்திர ஜாலம் என்னும் முறைகளெல்லாம் இதோடு சேர்ந்ததுதான்.

இது கிட்டத்தட்ட பாம்பு, தேள், சிங்கம், புலி போன்ற கொடிய உயிரினங்களை பிடித்து அவைகளை அடக்கி ஆளுவதைப் போன்ற ஒரு கடின வழி முறையாகும்.

ஆனால், இரண்டாவது முறையான மனதை ஒரு முகப்படுத்தி எண்ணங்களைக் கொண்டு உலகத்தவரை வசப்படுத்துவதே சிறந்த வழி முறையாகும்.

ஒரு ஆச்சரியமூட்டும் விஷயம் என்னவென்றால் இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு உயிரிடமும் ஒருவித வசீகர சக்தி இயல்பாகவே இருக்கிறது.

மயில் தனது அழகிய தோகையால் எல்லோரையும் வசீகரிக்கிறது. பாம்பு கூட தனது அழகிய படத்தால் பார்ப்பவர்களை அப்படியே கட்டிப் போடுகிறது. மனிதர்கள் வரையில் சிலரது அழகு நம்மை வசீகரிக்கும். சிலரோ இனிய சொற்களால் நம்மை அப்படியே சொக்க வைத்து கட்டிப் போடுவார்கள். இதெல்லாம் இயல்பாகவே பிறவியிலேயே அமைந்த வசீகர அம்சங்கள் ஆகும்.

இதை வளர்த்துக்கொண்டு உச்சத்திற்கு செல்லவும் வழிகள் உள்ளன.


 வசியம் ......

Comments