எங்கள் பகுதிகளில் இசக்கி அம்மன் என்று ஒரு காவல் தெய்வத்தை தெய்வமாக வணங்கி வருகின்றனர்.அவரவர் தோட்டத்தில் கன்னி மூலையிலே இந்த தெய்வத்தை பிரதிஷ்டை செய்து அதற்கு எண்ணெய் மஞ்சனம் என்று குங்குமங்கள் சாத்துவார்கள் அதை குளிமை படுத்துவதற்காக நல்லெண்ணெய் சாத்துவார்கள் அதற்கு சிவப்பு பட்டு உடுத்தி அரளி மாலை அணிவிப்பார்கள்
இந்த தேவதையானது இடது புறம் இடுப்பில் ஒரு குழந்தையை வைத்து கொடு இருக்கும் ஒவ்வொருவர் தோட்டங்களிலும் காவல் தெய்வமாக இருந்து வருகிறது .இதற்கு ஒரு கருங்கல் நடப்பட்டு இதற்கு பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்திலே அதற்கு பொங்கல் வைத்து பலி கொடுத்து கொடை விழா போல சிறப்பாக நடத்துவார்கள் ஒவ்வொரு தோட்டங்களிலும் .
இந்த தெய்வத்தை வைத்து பல மாந்திரீக வேலைகளை மாந்திரீகர்கள் செய்வார்கள் இந்த விஷயம் மிகவும் சூட்சமமான விஷயம் இது எனது தாத்தா முத்து பாண்டி வைத்தியர் கூறிதான் எனக்கு இதை போல பல விஷயங்கள் தெரிய வந்தது இப்போது கூட தினமும் பாடம் எடுப்பார் .
இசக்கி அம்மன் வசியம்
இந்த இசக்கி அம்மனை வசியம் செய்து சித்தி செய்து கொண்டால் ஒருவர் குடும்பத்தை அளிக்க வேண்டும் என்று கூறினால் அந்த குடும்பத்திற்கு வரும் நல்ல விசயங்கள் யாவும் தடை பட்டு நிற்கும் நோய் நொடிகள் அதிகம் வரும் அவர்கள் வீட்டில் யார் மேலாவது ஆட்டம் வரும் சாமி ஆட்டம் ,இப்படி அந்த குடும்பத்தை உபத்திரம் செய்யும் .
இப்படி இந்த தேவதையை வசியம் செய்யாமலும் பல விஷயங்கள் செய்யலாம் அது ஒரு குறுப்பிட்ட தூரம் வரைதான் வேலை செய்யும் இந்த தேவதை வைத்து மாந்திரீக வேலை செய்வதால் இதற்கு வாரம் ஒரு முறை கோழி பலியிட வேண்டும் .சரியான தருணத்தில் கொடுக்க வில்லை என்றால் அந்த தேவதை நம் வீட்டில் உள்ளவர்களை நிம்மதியாக இருக்க விடாது .
ஏவல் செய்தால் இப்படித்தான் நடக்கும்
இந்த தேவதை நமக்கு நல்ல முறையில் வேலை செய்யும் நாம் ஏவல் செய்த இடம் மிகுந்த பக்தி உள்ளவர்களாகவும் தெய்வ பலம் அதிகம் உள்ளவர்களாகவும் இருந்தால் அது மறு படியும் நம்மிடம் வந்து உபத்திரம் செய்யும் இந்த தேவதை வைத்து மாந்திரீகம் செய்தால் பல் இன்னல்களுக்கு ஆளாக வேண்டி இருக்கும் .
அதனால் பெரிய தெய்வங்களை நாம் சித்தி செய்து கொண்டால் நமக்கு எந்த பயமும் வேண்டாம் இந்த விசயங்கள் யாரும் வெளி விட மாட்டார்கள் நான் தான் நிறைய ஆன்மிக அன்பர்கள் சரியான குரு கிடைக்காமல் அல்லல் படுகின்றனர் அவர்களுக்கு இந்த விஷயங்கள் மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும் .
isakki amman thevathai
பிற மதத்தை சேர்ந்தவர்கள் இசக்கி அம்மனை சேவிக்கலாமா.
ReplyDeleteதெய்வம் என்பது அனைவருக்கும் பொது.தெய்வீக பக்திக்கு மதம் ஒருபோதும் தடையாகாது.எம்மதத்தவராயினும்,முழு மனதுடன் எந்த தெய்வத்தை வேண்டுமானாலும் வழிபடலாம்.
DeletePregnant ladies varalama
ReplyDeleteNo
Deleteஅம்மன் மந்திரம் இருக்கா?.
ReplyDelete